Saturday, February 7, 2009

எங்கும் குறள் எதிலும் குறள்

குறளை எங்கும் பார்க்கலாம். எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம். அதை விளக்கும் ஒரு கதை இதோ.

உங்களுக்கு காகமும் நரியும் கதை தெரியுமல்ல்வா? அந்த கதையின் மூலம் எப்படி குறளை எங்கும் பாக்கலாம்னு இங்கே பார்க்கப்போகிறோம்.
(இதை ஒரு நாடக வடிவில் கொடுத்திருக்கிறேன். இது கலிஃபோர்னியா தமிழ் கழக ஆண்டு விழாவில் மாணவர்கள் அளித்தது)

ஒரு ஊர்ல ஒரு வயதான பாட்டி வடை சுட்டு விற்று வாழ்ந்து வந்தார். (பாட்டி என்றாலே வயதானவர்தானே என்று கேட்கிறீரா? அதுவும் சரிதான்.)
அந்த வழியே வந்த வழிப்போக்கர் ஒருவர், பாட்டியைப் பாத்து
"ஏன் பாட்டி இந்த வயதிலும் இப்படி வேலை செய்து கஷ்டப்படறீங்க" என்று கேட்டார். அதற்கு அந்த பாட்டி, "என்னப்பா செய்யறது. என்னை கவனிக்க எனக்கு பிள்ளைகள் கிடையாது. அதுக்காக சும்மா இருக்க முடியுமா? என் ஐயன் திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கறார் தெரியுமா?
இலமென்று அசையி இருப்பாரைக் காணின்
நிலமெனும் நல்லாள் நகும்


அதனால எதுவும் இல்லையென்று சும்மா இருந்தா இந்த பூமித் தாய் நம்மைப் பார்த்து சிரிப்பாளாம். அதனால நான் என்னை நானே கவனித்துக்கொள்கிறேன்.

இதைக் கேட்ட வழிப்போக்கர், "நன்றி பாட்டி, இனிமேல் நான் எதுவும் இல்லையென்று சும்மாவே இருக்கமாட்டேன்" என்று கூறினார்.

அப்போது பக்கத்தில் இருந்த ஒரு மரத்திலிருந்த காகம் ஒன்று பறந்து வந்து பாட்டியின் வடையை தூக்கிக்கொண்டு போய் மரத்தில் உட்கார்ந்துக்கொண்டது.
இதைப் பார்த்த பாட்டி "காக்காவே, என்கிட்ட போய் நீ திருடறியே. இது உனக்கே நல்லா இருக்கா? என்று கேட்டார்.

அதுக்கு காகம், "பாட்டி, வாஸ்து சாஸ்திரப் படி என் வீட்டில் சமையலறை கட்டவில்லை. அதனால் எனக்கு வேறு வழி இல்லை. இப்ப நீங்கதானே சொன்னீங்க
இலமென்று அசையி இருப்பாரைக் காணின்
நிலமெனும் நல்லாள் நகும்

என்று" என்று சொன்னது.

அப்போது அந்த வழியா வந்த ஒரு நரி, காகத்திடமிருந்து வடையை பறிக்க திட்டமிட்டது. அந்த நரி காகத்தைப் பார்த்து கேட்டது,
"வெண்ணிலா போன்ற அழ்கான காக்காவே, குயில் போன்ற உன் இனிமையான குரல் கேட்க ஆசையா இருக்கு. எங்கே ஒரு பாட்டு பாடு பார்க்கலாம்" என்றது.
கொக்கு தலையில வெண்ணை வைப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த நரி காக்கா தலையிலே ஐஸ் ஃபேக்டரியையே அந்த காக்கா தலையிலே வைத்துவிட்டது.
வைத்த ஐஸ்லெ உருகின காக்கா கா கா கா என்று பாடியது. வடை கீழே விழுந்து விட்டது. நரி வடையை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டது. காகமும் ஏமார்ந்து விட்டது.
இதை கவனித்த பாட்டி காகத்திடம் "காக்கா, இப்ப என்ன ஆச்சி பார்த்தாயா? நாம் ஒருத்தருக்கு ஏதாவது தீங்கு செய்தா, இன்னொருத்தர் நமக்கு தீங்கு செய்வார்கள்"
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

என்று பாட்டி கூறினார்.

இதை எதையும் கவனிக்காமல் காக்கா "பாட்டி, என்ன இருந்தாலும் இந்த நரி இப்படி வடையை திருடக்கூடாது" என்றது. அதற்கு பாட்டி "காக்கா, மற்றவங்க குறையை நாம சொல்றதுக்கு முன்னாடி நம்ம குறையை முதல்லே பாக்கனும். அப்பதான் நமக்கு எந்த பிரச்சனையும் வராது.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிற்கு


அந்த காகத்துக்கு எதுவும் புரிந்த மாதிரி தெரியவில்லை.

அடுத்த நாளும் அந்த காகம் பாட்டி கவனிக்காத சமயம் பார்த்து வடையை எடுத்துக்கொண்டு போய் மரத்தில் உட்கார்ந்துக்கொண்டது. அன்றும் நரி வந்தது. காகத்தை பாடச் சொன்னது. ஆனால் காகம் வடையை காலில் வைத்துக்கொண்டு பாடியது.
ஏமாந்த நரியோ, "காக்கா, நீ பிரபுதேவா போல ஆடுவியாமே. என்கே பாடிக்கொண்டே ஒரு டான்ஸ் ஆடு பார்க்கலாம்" என்றது.
உடனே அந்த காக்கா, "என்னடா இது. இந்த நரி நம்மை விடாது போல இருக்குதே. இதுக்கு என்ன செய்ய்லாம்" என்று யோசித்தது. சிறிது நேரத்துக்குப் பின் ஒரு நல்ல வழி கிடைக்கிறது. அந்த காகம் நரியைப் பார்த்து "நரியே, எதுக்கு நீ இவ்ளே கஷ்டப்படறே. இந்த வடையை நானே உனக்குத் தருகிறேன். எடுத்துக்கொள்" என்று வடையை துக்கிப் போட்டது.
அந்த நரிக்கு ஒரே குழப்பம். சிறிது நேரத்தில் குழப்பம் தீர்ந்த நரி, "காக்கா, உன்னை எத்தனை முறை நான் ஏமாத்தி இருக்கிறேன். ஆனால், நீயே எனக்கு வடை கொடுத்து உதவறீயே. இதை நெனச்சி நான் ரொம்ப வெக்கப் படறேன். என்னை மன்னித்து விடு. இனிமேல் நாம் நண்பர்களாக இருப்போம்." என்று கூறி காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது. காகத்துக்கு பிரச்சனை தீர்ந்தது.
இதை கவனித்த பாட்டி அந்த காகத்திடம் கேட்டார், "காக்கா, எதுக்கு அந்த நரிக்கு உன் வடையை நீயே கொடுத்தே?" என்று. அதற்கு அந்த காகம் சொன்னது, "பாட்டி, என் வழி தனி வழி. வள்ளுவர் என்ன சொல்லி இருக்கறார்?
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்


என்று. அதனால வள்ளுவர் வழியில் என் பிரச்சனையை நானே திர்த்துக்கிட்டேன்" என்று.

அதைக் கேட்ட பாட்டி "ரொம்ப சரியா சொன்னே காக்கா. அவர் வழிதான் தனி வழி" என்று சொன்னார்.

No comments:

Post a Comment