Sunday, February 8, 2009

பொருளாதார பிரச்சனையை எப்படி தடுத்திருக்கலாம்

இன்று உலகம் முழுதும் பொருளாதார பிரச்சனை.
இதை முன் கூட்டியே தடுத்திருக்க முடியும். அதற்கான வழிகளை வள்ளுவர் கூறி இருக்கிறார்.

வருமுன்னர் காவா தான் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலகெடும்


பிரச்சனைகள் வருவதற்கு முன்பே காத்துக்கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பு முன்னால் உள்ள வைக்கோல் போருக்கு சமம். அதாவது Financial crisis and credit crisis பிரச்சனைகள் வருவதற்கு முன்பே அதை அறிந்து தடுத்துக் கொண்டிருக்க வேண்டும். தும்பை விடுத்து வாலைப் பிடித்தது போல இப்பொழுது உலக நாடுகள் எல்லாம் கவலைப் படுகின்றன.

இந்த அறிவுரை பொதுவாக எல்லா பிரச்சனைகளுக்கும் பொருந்தும். ஆனால் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஏற்ற அறிவுரைகள் என்ன?
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகி தோன்றாக் கெடும்

வருமானத்துக்கேற்ற செலவு தான் செய்ய் வேண்டுமே ஒழிய அதற்கு மேல் செலவு செய்யக்கூடாது.
எனக்கு வருவாய் அவ்வளவாக இல்லையே, நான் என்ன செய்வது என்று கேட்பது என் காதில் விழுகிறது. அதற்கும் வள்ளுவர் வழி கூறுகிறார்.
ஆகாறு அள்வீட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை

அதாவது வருமானம் அதிகம் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் செலவு அதிகம் இருக்கக் கூடாது என்கிறார். வரவுக்கேற்ற செலவு செய்து வாழ்ந்திருந்தால் இந்த பொருளாதார பிரச்சனைகள் வராமல் தடுத்திருக்கலாம்.

ஔவையாரும் அதையே
ஆன முதலின் அதிகம் செலவானால்
மானமிழந்து மதி கேட்டு போன திசை
எல்லார்க்கும் பொல்லானாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் கள்ளானாம் நாடு

என்கிறார்.

இதை உணர்ந்து நடந்திருந்தால் பொருளாதாரச் சிக்கல் வராமல் தடுத்திருக்கலாம் அல்லவா?

No comments:

Post a Comment